×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஆன்ஸ் ஜெபர்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட போலந்தின் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் (28 வயது, 17வது ரேங்க்) மோதிய ஜெபர் (28 வயது, 5வது ரேங்க்) 6-1, 6-3 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 6 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்காவை (24 வயது, 6வது ரேங்க்) சந்தித்த இகா ஸ்வியாடெக் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக விளையாடி சபலெங்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 11 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பரபரப்பான பைனலில் இகா – ஜெபர் மோத உள்ளனர். யுஎஸ் ஓபன் வரலாற்றில், மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்து மற்றும் வடக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் விளையாட உள்ளது இதுவே முதல் முறையாகும்….

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஆன்ஸ் ஜெபர் appeared first on Dinakaran.

Tags : Ann Jeffer ,US Open ,New York ,Poland ,US Open Grand Slam ,
× RELATED 1965 மணி நேரம், 163 பேர் உழைப்பில் உருவான அலியா பட் புடவை